அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி காங்கிரஸ் மரியாதை

சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி. எஸ். முரளிதரன் தலைமையில் தென்பாகம் காவல் நிலையம் அருகே அமைந்துள்ள அவரது திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் சேகர், ஐசன் சில்வா, SC பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பிரபாகரன், சிறுபான்மை பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் மைதீன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் வெங்கட் சுப்பிரமணியன், மாவட்டத் துணைத் தலைவர் ரஞ்சிதம் ஜெபராஜ், மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, வார்டு தலைவர்கள் மகாலிங்கம், ரத்தன், சரவணன், மகேந்திரன், முத்துராஜ், மரிய செல்வராஜ், தனுஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


