தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா: கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்

 

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா கோலாகலமாக கொடியேற்றத்துடன் துவங்கியது.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா மாலையில் ஜெபமாலை பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் கத்தோலிக்க பள்ளிகளின் கண்காணிப்பாளர் அருட்தந்தை. பிராங்கிளின் தலைமையில், பங்குத்தந்தை அருள்பணி. செல்வன் பெர்னான்டோ, அருட்தந்தை. அமலன், அருட்தந்தை. விஜின் மரியதாஸ், அருட்தந்தை. ஜேசுராஜா, அருட்தந்தை. ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில், பவனியாக வந்து கொடியை மந்திரித்து கொடிமரத்தில் “மரியே வாழ்க!, மரியே வாழ்க!” என இறை மக்கள் கோஷமிட கோலாகலமாக கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து திருப்பலி, மறையுரை நடைபெற்றது. திருவிழா நவ நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, திருப்பலி நடைபெறுகிறது.

14ஆம் தேதி மாலை சிறப்பு ஆராதனை சேர்ந்தபூமங்களம் பங்குத்தந்தை அருட்தந்தை.ராயப்பன் தலைமையில், சிறுமலர் குருமட தலைவர் அருட்தந்தை. உபர்ட்டஸ் மறைவுரை நடைபெறுகிறது.

முக்கிய விழாவான பெருவிழா ஆடம்பர கூட்டத் திருப்பலி 15ஆம் தேதி காலை 7 மணிக்கு கேரளா பாலக்காடு மறை மாவட்டம் அருட்தந்தை.சகாய வேந்தன் தலைமையில், தூய தோமையார் கல்வி குழுமம் அருட்தந்தை. அமலன் தமியான் கலந்து கொண்டு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி நிறைவேற்றப்படுகிறது.

பின்னர் மாலை ஜெபமாலை, நற்கருணை ஆசீர், கொடியிறக்கம், அன்பியம் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை செல்வன் பெர்னாண்டோ தலைமையில் பங்கு பணி குழுவினர், அன்பியங்கள், இறைமக்கள், அருள் சகோதரிகள் செய்து வருகின்றனர்.

  

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *