சுதந்திர தின விழா: தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய கொடி ஏற்றி மரியாதை
 
					தூத்துக்குடி: சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் சாரல் மழையில் நனைந்தபடி மாவட்ட ஆட்சியர் இளம் பகவத், தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
 
  
  
 
பின்னர் அனைத்து துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடியே 45 லட்சத்து 96 ஆயிரம் 419 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். மாணவ மாணவியரின் கண்கவர் அணிவகுப்பு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
  
  
  
  
  
  
 
நாட்டின் 79 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் கலந்து கொண்டு சாரல் மழையில் நனைந்தபடி தேசிய கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் மாணவ மாணவிகளின் கன் கவர் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு பதக்கங்களை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு சால்வை அணிவித்து அவர்களை கௌரவித்தார்.
 
  
  
 
இதைத்தொடர்ந்து தூத்துக்குடி சேர்ந்த சைனிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களின் பேக் பேண்ட் பைப் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அனைத்து துறைகளின் சார்பில் 79 பயனாளிகளுக்கு சுமார் 2 கோடியே 45 லட்சத்து 96 ஆயிரம் 419 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.


 
			 
			 
			 
			 
			