ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி – தேர்தல் முன்னேற்பாடுகள் & வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி – தேர்தல் முன்னேற்பாடுகள் & வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி – தேர்தல் முன்னேற்பாடுகள் & வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த கூட்டம் மற்றும் வட்டார காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் MRG தனியார் மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், “வாக்குத்திருட்டில் ஈடுபடும் பாஜகவோடு தேர்தல் கமிஷனும் இணைந்துள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஒற்றுமையுடன் பணியாற்றினால் நிச்சயம் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் கூட்டணி வெற்றி பெறும்” என்றார் அவர்.

ஆலோசனை கூட்டத்தில், மாநில, மாவட்ட, வட்டார காங்கிரஸ் கமிட்டியின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துணை அமைப்புத் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்ட முடிவில் செய்தியாளர்களிடம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நிவேதித் ஆல்வா பேசுகையில், “இன்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் தேர்தலில் கட்சியினர் செய்ய வேண்டிய விஷயங்களை பற்றி விவாதித்தோம்.”

“மேலும் மத்தியில ஆட்சி புரியும் பாஜக அரசின் செயல்பாடுகள் இந்திய மக்களையும் தமிழக மக்களையும் எவ்வளவு பாதித்திருக்கிறது என்பதை பற்றி நன்றாக சிந்தித்து யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை மக்களுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்துவது சம்பந்தமாக விவாதித்தோம்.” மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதித்தோம்” என்றார் அவர்.

மேலும், அமித்ஷாவின் தமிழக வருகைக்குப் பின்னர் கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐயிடம் இருந்து விஜய்க்கு வந்த சம்மன் குறித்த கேள்விக்கு, “நாங்கள் பதில் சொல்ல விரும்பவில்லை நீங்கள் அவர்களிடமே கேளுங்கள். ஆட்சியில் பங்கு பற்றிய கேள்விக்கு தலைமை தான் அதைப்பற்றி முடிவு செய்யும்” என்றார்.

   

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *