தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: பாஜக அரசு கொண்டு வந்த VB–G RAMG திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மாற்றமின்றி தொடர வேண்டும் என்றும், பாஜக அரசு கொண்டு வந்த VB–G RAMG திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தும் கோரிக்கை மனுவை, தமிழ்நாடு முதலமைச்சருக்கும், பாரத பிரதமருக்கும் அனுப்பும் வகையில், இன்று தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு வாசகம் எழுதிய பதாகைகள் ஏந்தி, “ஒன்றிய அரசை கண்டிக்கிறோம். வன்மையாக கண்டிக்கிறோம்,” என்று பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி காங்கிரஸார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரஸ் மனு அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மண்டல தலைவர்கள் தெற்கு மண்டலம் எஸ்பி ராஜன், மேற்கு மண்டலம் செந்தூர்பாண்டி, வடக்கு மண்டலம் சேகர், கிழக்கு மண்டலம் ஐசன் சில்வா, முன்னிலை வகித்தனர்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பி.சுடலையாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், மாவட்ட செயலாளார்கள் கோபால், நாராயணசாமி, டேவிட் வசந்தகுமார், மாவட்ட பொதுச்செயலாளர். மைக்கேல் பிரபாகர், மடத்தூர் தனபால் ராஜ், காமாட்சி, கோபால், மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியம், துணை அமைப்பு மாவட்ட தலைவர்கள், இளைஞர் காங்கிரஸ் மரிய ஆல்வின், மகிளா காங்கிரஸ் பிரீத்தி வினோத், ஆராய்ச்சி துறை ஆடிட்டர் சிபிராஜ் மோகன், எஸ்.சி.துறை பிரபாகரன், அமைப்புசாரா பிரிவு நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு பாலசுப்பிரமணியன், மீனவர் அணி மிக்கேல், மனித உரிமை வழக்கறிஞர் கியூபெட், கலைப்பிரிவு பெத்துராஜ், சின்னக்காளை, முன்னாள் மாமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி முத்துவிஜயா, மகிளா காங்கிரஸ் மாநில அமைப்பாளர் ஜெயஜோதி, கிழக்கு மண்டல துணைத் தலைவி அசன்பாத்து, முன்னாள் மாவட்ட எஸ்சி துறை தலைவர் ராஜாராம், ஐ என் டி யூ சி கண்ணன், வார்டு தலைவர்கள் முத்துராஜன், எம் கே முனியசாமி, தனுஷ் கோமு, கிருஷ்ணன், சுப்பிரமணியன், செயலாளர் ராஜ்குமார், காமராஜ் கள்ளன், காமராஜ் அல்போன்ஸ், செல்வவிநாயகம், மரியசிங்கம், மாரியப்பன் உட்பட பலர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *