தூத்துக்குடி: காங்கிரஸ் கட்சியினர் ‘நோட்டீஸ்’ கொடுத்து ‘விழிப்புணர்வு’
தூத்துக்குடி: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் பெண்களுடன் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சாகாயராஜ் தலைமையில் சந்தித்து. நிறை குறைகளை கூறி கலந்துரையாடினார். பின்னர் அவர்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் (MGNREGA) 2005-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம்.
இது கிராமப்புறங்களில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு குறையாத திறனற்ற உடல் உழைப்பு வேலைவாய்ப்பை சட்டப்பூர்வமாக உறுதி செய்கிறது.
குறிப்பாக பெண்கள், குளங்களைத் தூர்வாருதல், சாலை அமைத்தல், மரம் நடுதல் போன்ற பணிகளில் ஈடுபட இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது. 2024-2025 நிதியாண்டில் ஊதியம் உயர்த்தப்பட்டு, இத்திட்டம் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது.

100 நாள் வேலை திட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் சிறப்புகள்:
சட்டப்பூர்வ உரிமை: இது 2005-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான அரசால் கொண்டுவரப்பட்டது, தற்போது மத்திய அரசால் செயல்படுத்தப்படுகிறது.
பணிகள்:
கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் தூர்வாருதல், சாலை மேம்பாடு, காடுகள் வளர்ப்பு போன்ற பொதுப் பணிகள் செய்யப்படுகின்றன.

தினக்கூலி: 2023-24-ல் தினக்கூலியாக ரூ. 294 வழங்கப்பட்ட நிலையில், தற்போது இது உயர்த்தப்பட்டு வருகிறது.
வேலை வாய்ப்பு:
விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் வேலை வழங்கப்பட வேண்டும், தவறினால் வேலையின்மை உதவித்தொகை பெற சட்டத்தில் வழிவகை உள்ளது.
பயனாளிகள்:
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறுகிறார்கள், குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் இப்பணியில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர்.

டிஜிட்டல் முறை:
ஊழலைத் தவிர்க்க தற்போது இந்தத் திட்டம் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் கிராமப்புற ஏழைகளுக்கு, குறிப்பாக விவசாயம் இல்லாத காலங்களில், நிலையான வருமானத்தை உறுதி செய்து, இடப்பெயர்வைத் தடுக்கிறது.
தேசியத் தலைவர் ஆணையின்படி 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அவர்களது கிராமங்களில் சென்று காங்கிரஸ் கட்சியினர் நோட்டீஸ் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்து மீள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பழைய நடைமுறைகளையும் மற்றும் தற்போது உள்ள மத்திய அரசு கொண்டுவந்துள்ள திட்டத்திற்கான வேறுபாடுகளையும் அத்திட்டத்தில் கீழ் வேலை பார்க்கும் பெண்களுடன் தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.சாகாயராஜ் தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் முள்ளக்காடு மற்றும் பொட்டல்காடு கிராம ஊராட்சியில் உள்ள பயனளிகளை சந்தித்து நிறை குறைகளை கூறி கலந்துரையாடினார். பின்னர் அவர்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், தெற்கு மண்டல தலைவர் எஸ்.பி.ராஜன், மேற்கு மண்டலத் தலைவர் செந்தூர்பாண்டி, கிழக்கு மண்டல தலைவர் ஐசன் சில்வா, மூத்த காங்கிரஸ் நிர்வாகிகள் முனியதங்கநாடார், ஜெயக்கொடி, மார்க்கஸ், ஐ என் டி யூ சி பாலகிருஷ்ணன், துணை அமைப்பு தலைவர்கள். எஸ்.சி.துறை தலைவர் ஏ.டி.பிரபாகரன், விவசாய பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், அமைப்பு சாரா அணித் தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், ஊடகப்பிரிவு ஜான் சாமுவேல், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கேல் பிரபாகர், மாநில மகளிர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் திருமதி முத்துவிஜயா, மாநில செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி , மாநில சிறுபான்மை பிரிவு இணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியம், இளைஞர் காங்கிரஸ் மாநகர நிர்வாகிகள், ஜெயமணி, சுரேஷ், ரன்னிஸ், ஜோசப், சிவசுப்பு, முன்னாள் மாமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், அத்திமரப்பட்டி சுந்தர், எஸ்சி. பிரிவு முன்னாள் தலைவர் ராஜா ராம், வார்டு தலைவர்கள். மகாலிங்கம், முனியசாமி, தனுஷ், சுப்பிரமணியன் மற்றும் முத்தையாபுரம் ஜாண், முருகேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


