வாக்கு திருட்டில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரசார் பேரணி
தூத்துக்குடி: வாக்கு திருட்டில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக கோரி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.

வாக்கு திருட்டில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக கோரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தபடியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் அறிவித்தபடியும், தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில் பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி தேர்தல் ஆணையத்திற்கும், மத்திய மோடி அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பி பேரணியாக சென்று ஒன்றாம் கேட் காந்தி சிலை முன்பாக ஊர்வலம் நிறைவடைந்தது.

ஊர்வலத்தில் வாக்கு திருடனே உடனடியாக பதவி விலகு, துணை போகாதே துணை போகாதே, தில்லு முல்லுக்கு தேர்தல் ஆணையமே துணை போகாதே, என்று கோஷங்கள் எழுப்பி திரளான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் ஏ பி சி வி சண்முகம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி,

மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திர போஸ், காங்கிரஸ் எடிசன், சாமுவேல் ஞானதுரை, ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மீனவரணி மாநகர் மாவட்ட தலைவர் மிக்கேல், விவசாயப் பிரிவு மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் மைதீன், கலை இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் செல்வராஜ், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி பிரீத்தி வினோத், ஆராய்ச்சித்துறை மாநகர் மாவட்ட தலைவர் சிவராஜ் மோகன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் பெத்துராஜ், எட்வர்ட், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் எஸ்.எம். சகாயராஜ், எஸ்சி பிரிவு மாநகர மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்புசாரா மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி,

முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவி முத்தவிஜயா, ஊடகப்பிரிவு மாநில செயலாளர் ஆசீர் செல்வன், இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவர் கமலாதேவி, கிழக்கு மண்டல தலைவர் விஜயகுமார், மாநகர் மாவட்டத் துணைத் தலைவர்கள் சின்னகாலை, தனபால் ராஜ், ரூபன் வேத சிங், டேவிட் வசந்தகுமார், நவரோஜ், ஆரோக்கியம், மாவட்ட செயலாளர்கள் நாராயணசாமி, கதிர்வேல், குமார முருகேசன், அந்தோணி ஜெயராஜ், சேவியர் மிசியர்,

காமாட்சி தனபால், ஜோ பாய் பச் ஷேக், அழகுவேல், கந்தசாமி, வார்டு தலைவர்கள் சித்திரை பால்ராஜ், வாசிராஜன், முருகேசன், ராஜரத்தினம், மாரியப்பன், சரவணன், வில்சன், ஜேம்ஸ், அந்தோணிசாமி, கிருஷ்ணன், முனிய தங்க நாடார், சிமியான், அந்தோணி குரூஸ், கருப்பசாமி, வெங்கட் சுப்பிரமணியன், மணி, தாமஸ், சிவன் யாதவ், ரெனிஷ் பாபு, கணேசன், சுரேஷ், மகாராஜன், தம்பி நாயக்கர், முத்தமிழ் அரசன், ஜெயமணி சுரேஷ், அசன் பாத்திமா, தங்கம், மாரியம்மாள், லட்சுமி, வனஜா, வேணி, மகேஸ்வரி, ராமலட்சுமி, உள்பட 200க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

