காமராஜரின் எளிய வாழ்க்கை முறையை தவறாக சித்தரித்த திருச்சி சிவா: தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கண்டனம்
பெருந்தலைவர் காமராஜரின் எளிய வாழ்க்கை முறையை தவறாக சித்தரிக்கும் வகையில், உரையாற்றிய நாடாளுமன்ற திமுக உறுப்பினர் திருச்சி சிவா அவர்களின் பேச்சை தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாநகர மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“எளிமையான குடும்பத்தில் பிறந்து எளிமையான வாழ்க்கை, வாழ்ந்த தலைவரை மிகப் பெரிய செல்வந்தர் வாழ்க்கை முறைக்கு காமராஜர் மாறிவிட்டார் என்பது போல பேசி இருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.”
“ஏழ்மையில் பிறந்து, எளிமையில் மறைந்த தலைவர் இந்தியாவில் ஒருவர் உண்டென்றால் அது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மட்டுமே. அவர்களின் வழியில் வந்த கக்கன், மஜீத், ஜீவா போன்ற தலைவர்கள் வாழ்ந்த எளிமையான வாழ்க்கை முறையையும் நாம் மறந்து விட முடியாது.”
எனவே திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவா அவர்கள் உடனடியாக தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.”

