நன்னீர் நாயகன் குரூஸ் பர்னாந்து 156 ஆவது பிறந்தநாள் : தூத்துக்குடியில் காங்கிரசார் மரியாதை

தூத்துக்குடி மாநகருக்கு குடிநீர் கொண்டு வந்த ‘ஐயா குரூஸ் பர்னாந்து’ அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குருஸ் பர்ணாந்து சிலைக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் மண்டல தலைவர்கள் ஐசன் சில்வா, செந்தூர் பாண்டி, சேகர், எஸ்/சி பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன், அமைப்புசாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாசலம், மாவட்ட பொதுச் செயலாளர் மைக்கில் பிரபாகர், மாவட்டச் செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, அந்தோணி ஜெயராஜ், வார்டு தலைவர்கள் சித்திரை பால்ராஜ், வில்சன், சரவணன், சிவன் யாதவ், ரெனிஷ் பாபு, சுப்பிரமணியன், ராஜரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


