தூத்துக்குடியில் புகைப்பட கண்காட்சி அரங்கினை திறந்து வைத்த கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடியில் புகைப்பட கண்காட்சி அரங்கினை திறந்து வைத்த கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற 6வது தூத்துக்குடி புத்தகத் திருவிழாவை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தின் செழுமையை வெளிப்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட புகைப்படக் கண்காட்சி போட்டியின் சிறந்த புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அரங்கினை (23/08/2025) திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி திறந்து வைத்தார்.

பின்னர் புத்தக அரங்குகளை பார்வையிட்ட கனிமொழி கருணாநிதி எம்.பி., புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தார். மேலும், புத்தகத் திருவிழாவிற்கு வருகைதந்த பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். முன்னதாக, “தொடர்ந்து படி தூத்துக்குடி” என்ற 6வது புத்தகத் திருவிழா தொடர்பான வாசகங்கள் அடங்கிய ராட்சச பலூன்களை கனிமொழி கருணாநிதி எம்.பி. முன்னிலையில் பறக்க விட்டார்.

இந்நிகழ்வில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *