தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்துஅன்னை கிளைச்சபையின் 23 வது ஆண்டு விழா:

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்துஅன்னை கிளைச்சபையின் 23 வது ஆண்டு விழா மற்றும் கிறிஸ்து பிறப்பு விழா பங்குத்தந்தை அருட்பணி செல்வன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் மத்திய சபைத்தலைவர் சகோதரர் ஜுட்ரன் அவர்களும் தூத்துக்குடி வட்டார சபைத்தலைவர் சகோதரர் மைக்கேல் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
20 சுவீகார குடும்பம் உட்பட மொத்தம் 54 நபர்களுக்கு ரூ.70000/-மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.








