தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை! திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் கனிமொழி MP ஆய்வு
தூத்துக்குடியில் பெய்து வரும் கனமழை! திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் நேரில் ஆய்வு செய்த கனிமொழி கருணாநிதி எம்.பி.

தென்குமரிக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, தென் தமிழக மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வினாடிக்கு 19,747 கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது. இதனால், ஆற்றுப் படுகையில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


இதனையடுத்து, (24/11/2025) திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஐஸ்வர்யா, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

