33% இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நடைமுறைப்படுத்துக: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத்

33% இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நடைமுறைப்படுத்துக: தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத்

33% இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் வலியுறுத்தி உள்ளார்.

தூத்துக்குடி மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் புதிய நிர்வாகிகளுக்கு பதவி வழங்கும் விழா, எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள சிட்டி டவரில் வைத்து மாநகர மாவட்ட மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி ப்ரீத்தி வினோத் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் கலந்து கொண்டு புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள மகிளா காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நியமன கடிதங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்.

பின்னர் மாநில மகிளா காங்கிரஸ் தலைவி ஹசினா சையத் செய்தியாளர்களிடம் பேசுகையில், “இந்தியாவில் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.”

“பெண்களுக்கு மத்தியில் 33% இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டு தற்போது வரை அதில் நடைமுறைப்படுத்தவில்லை. ஆகவே உடனடியாக பெண்களுக்கான மசோதாவை நடைமுறைப்படுத்த வேண்டும்.”

“6.5 லட்சம் வாக்காளர்கள் போலி வாக்காளர்களாக உள்ளனர். மேலும் தமிழகத்தில் போலி வாக்காளர்கள் ஊடுருவி வருவதை தடுக்க தமிழக காங்கிரஸ் கமிட்டி மற்றும் மகிளா காங்கிரஸ் கமிட்டியினர் அடையாளம் கண்டு தடுக்க உள்ளோம்” என்றார்.

புதிய நிர்வாகிகள்:-

துணைத் தலைவர்கள்: அன்னதாசி மரிய கிரேஸர், எலிசபெத், பொதுச் செயலாளர்கள். மீனாட்சி சுந்தரி, பிளஸ்சி ப்ளோரினா.

செயலாளர்கள்: சேஸி சுபாஷினி, வள்ளி மனோகரன், ரீனா மரிய அந்தோணி

துணை செயலாளர்கள்: மதி மலர் சிந்தா, அக்‌ஷிலியா, முருகேஸ்வரி.

சமூக ஊடகப் பொறுப்பாளர்: அன்ன மரியா.

பொருளாளர்: சீத்தா லட்சுமி.

மாநில பொதுக்குழு உறுப்பினர்: கஸ்தூரி வேல்.

முன்னிலை வகித்தவர்கள்:-

மண்டல தலைவர்கள் சேகர், ராஜன், ஐசன் சில்வா.

வாழ்த்தி சிறப்புரை ஆற்றியவர்கள்:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ஏபிசிவி சண்முகம், மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். சுடலையாண்டி, மாமன்ற உறுப்பினர்கள், சந்திர போஸ், எடிண்டா, கற்பக கனி சேகர், மற்றும் ஐஎன்டியுசி மாநில அமைப்பு செயலாளர் ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், மீனவராணி மாநகர் மாவட்ட தலைவர் மைக்கேல், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மாநில செயற்குழு உறுப்பினர் சாந்தி மேரி, இளைஞர் காங்கிரஸ் வடக்கு மண்டல தலைவி கமலா தேவி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *