தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையம் திறப்பு
தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த நவீன காவல் கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு மையத்தை இன்று அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தை ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய அவர், “குற்ற செயல்கள் நடப்பதை குறைத்திட வேண்டும் என்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்த வேண்டும் என்பதற்காக எல்லா பகுதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. மொத்தம் இன்று 430 கேமரா கண்காணிப்பை தொடங்கி வைக்க வைத்துள்ளனர்.”

“விபத்து மற்றும் கூட்ட செயல்கள் போன்றவற்றை தீவிரமாக கண்காணிப்பதற்கு கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அது மட்டுமன்றி ட்ரோன் மூலமாகவும் கண்காணிப்பு மேற்கொள்ள இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.”
“இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ட்ரோன் மூலமாக கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டனர் மின்சாரம் இல்லை என்றாலும் இந்த கேமராக்கள் செயல்படும் இந்த கேமராவை திருடவோ உடைக்கவும் முயற்சித்தால் அதுவும் தடுக்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.”

“என்ன நவீன கண்காணிப்பு மக்களுக்கு நலம் தரும் வகையில் மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது.”
“ஏற்கனவே 2000 கண்காணிப்பு கேமராக்கள் நகரில் உள்ளது என்று கூடுதலாக 686 கேமராக்கள் அமைக்கப்பட்டது.”
“மக்கள் நலன் அவர்களை மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.”

“காவல் துறைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குடும்ப வன்முறை சட்டத்தை முழுமையாக செயல்படுத்தக்கூடிய துறை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகம் குடும்ப வன்முறை வரதட்சணை கொடுமை புகார் தெரிவிப்பவர்கள் சமூக நலத்துறையில் உள்ள பாதுகாப்பு அலுவலகம் புகார் அளித்து மேலும் நடவடிக்கை தேவை என்றால் காவல்துறையை அணுகலாம்.”
“இல்லையென்றால் நீதிமன்றத்தை வழக்கு தந்தாலும் அதற்கு தேவையான உதவி சமானால் தடை செய்யும் 181 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளும் புகார் தெரிவிக்கலாம்.”

“சட்ட நடவடிக்கை மருத்துவ நடவடிக்கை கலந்து ஆலோசனைகள் போன்றவை சமூக நலத்துறை மூலமாக வழங்கப்படும்.”
“உடல் வலிமை குறைந்த பெண்களை தாக்குதலுக்கு உள்ளாகின்றன. வெளியிடங்களில் அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படுகிறது. மகளிர் நலன் காக்கும் வகையில் மகளிர் காவல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சரின் நோக்கம்” என்று கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், தூத்துக்குடி உதவி காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீ மதன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள், சண்முகராஜ், சுரேஷ் முருகன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


