ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா: தூத்துக்குடி மாவட்ட காங்கிரசார் கொண்டாட்டம்
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா தூத்துக்குடி தபசு மண்டபம் அருகே உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்பு ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சந்திரபோஸ் MC, ஐசன் சில்வா, மண்டல தலைவர் செந்தூர்பாண்டி, ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், எஸ்சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர்A.D. பிரபாகரன், விவசாய பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன், மாநகர் இளைஞர் காங்கிரஸ் தலைவர் மரியா ஆல்வின், வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலா தேவி, முன்னாள் மகிலா காங்கிரஸ் தலைவர் முத்து விஜயா, அமைப்பு சாரா மாநகர் மாவட்ட தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மாவட்ட துணைத் தலைவர்கள் ரஞ்சிதம் ஜெபராஜ், அருணாசலம், முத்துராஜ், வெங்கட் சுப்பிரமணியன் Ex.MC, மாவட்ட செயலாளர்கள் கோபால், நாராயணசாமி, குமாரமுருகேசன், அந்தோணி ஜெயராஜ், ரூபன் வேத சிங், கதிர்வேல், வார்டு தலைவர்கள் தனுஷ், ரெனிஷ் பாபு, கிருஷ்ணன், முனியசாமி, ஜோசப் அரவிந்த், ஜெயமணி சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


