மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி: தூத்துக்குடி வீரர்கள் சாதனை

மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி: தூத்துக்குடி வீரர்கள் சாதனை

மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டியில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் பயிற்சி பெற்ற வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.

தமிழ்நாடு மாநில நீருக்கடியில் விளையாட்டு சங்கம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம் நீருக்கடியில் விளையாட்டு சங்கம் இணைந்து நடத்தும் 5வது மாநில அளவிலான ஃபின்ஸ்விம்மிங் நீச்சல் போட்டி – 2025 தூத்துக்குடியில் உள்ள கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமியில் நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி ஸ்பீக் இயக்குனர் ஸ்ரீ E. பாலு மற்றும் தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ ஆல்பர்ட் ஜான் IPS சிறப்பு விருந்தினராக பங்கேற்று இப்போட்டியை துவக்கிவைத்தனர்.

இப்போட்டிக்கு ஸ்பான்சர்ஷிப் வழங்கிய தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி, K.சின்னத்துரை & கோ, டைமெண்ட் கோல்டன் பிளாட்டினம் நிறுவனம் மற்றும் ஆர்ட்டிக்ஸ் இன்ட்டெரியர் கட்டிடக்கலை நிறுவனங்களுக்கு கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமி சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

இப்போட்டியில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை SRM கல்லூரி அணி தட்டிச்சென்றது. கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமி அணி தங்கம்-10, வெள்ளி-12, வெண்கலம்-7 பதக்கங்களை வென்று இரண்டாவது இடத்தை பெற்றது.

போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடெமியின் உரிமையாளர் திரு. ரைபின் தார்சியஸ் மற்றும் திருமதி. விஸ்வ பாரதி வாழ்த்துக்கள் தெரிவித்தனர். போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் திரு.புஷ்பராஜ், திரு. ஆதிலிங்கம் மற்றும் மாரி கண்ணன் பெற்றோர்களுக்கு கேம்ஸ்வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நன்றி தெரிவித்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *