‘எத்தனை சீட்டு கிடைக்கும்? எத்தனை சீட்டில் ஜெயிக்க முடியும்?’: தூத்துக்குடியில் வைகோ விளக்கம்

‘எத்தனை சீட்டு கிடைக்கும்? எத்தனை சீட்டில் ஜெயிக்க முடியும்?’: தூத்துக்குடியில் வைகோ விளக்கம்

“எத்தனை சீட்டு கிடைக்கும்? எத்தனை சீட்டில் ஜெயிக்க முடியும்? என்று கணக்கு போட்டுக்கொண்டு நாங்கள் கூட்டணியில் உட்கார்ந்து இருக்க வில்லை”  என்று தூத்துக்குடியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

‘ஸ்டெர்லைட் போராட்ட வரலாறு…. இன்றைய அரசியல்!’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் மதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.

அப்போது, “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஒருபோதும் அனுமதித்திட கூடாது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி 2026- தேர்தலுக்குப் பின்னரும் ஆட்சி மலர வேண்டும்.”

“நாம் எங்கே எந்த கூட்டணியில் இருந்தாலும் நன்றி விசுவாசத்தோடு உழைப்பவர்கள். இதில் ஆயிரம் கட்டுக் கதைகள் பொய் செய்திகளை ஏடுகள் வெளியிடலாம். எட்டுக்காலம் போடலாம். youtube லும் பரப்பலாம். எனது மகன் மத்தியில் மந்திரியாவதற்காக பிரதமரை பார்த்தான் என்று.”

“அட முட்டாள்களே… ரஷ்யாவில் அடைபட்டு இருக்கக்கூடிய ஒரு தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி மாணவனை உக்ரைன் போர்க்களத்திற்கு அனுப்பப் போகிறார்கள். போனால் அவன் சாவது உறுதி என்று ஒவ்வொரு தலைவர்கள் வீட்டிற்கும் மாணவர்களின் தாய் தந்தைகள் கதறியாளர் இதை துரை வைக்க அறிந்த மாத்திரத்தில் வெளிவிகார அமைச்சரை சந்தித்து மாணவரை தமிழ்நாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று சொன்னதோடு மட்டுமல்லாது. இதை பிரதமர் நரேந்திர மோடியிடமும் போய் சொன்னான்.”

“இந்த ஒரு மாணவன் மட்டுமல்ல நூற்றுக்கணக்கான மாணவர்கள் இப்படித்தான் ரஷ்யாவில் இருக்கின்றனர். அவர்களை மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி இதை மனிதாபிமான கடமையாக செய்து கொண்டிருக்கிறான் அதற்குள்ளாக “மதிமுக கூட்டணி மாறும்” எழுதிய விரல்கள் அழுகிப்போகும்.

மனிதாபிமானத்தோடு போய் பார்த்தால் அதிமுக கூட்டணி மாறுகிறதா? கூட்டணி எப்பொழுது மாறினோம் கொலைகாரனை நரேந்திர மோடி அழைத்தபோது இந்த நிமிடமே நான் வெளியேறுகிறேன் என்று கூட்டணியை உடைத்துக் கொண்டு வெளியேறினேன். ”

“மனப்பூர்வமாக திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கரம் கோர்த்து நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம். பணி ஆற்றுவோம். எதையும் எதிர்பார்த்து நாங்கள் இல்லை.”

“என்னுடைய சகாக்கள் தன்னலமற்ற வீர திலகங்கள், தியாக ரத்தினங்கள் அவர்களால் இந்த கட்சி காப்பாற்றப்படுகிறது. அவர்களால் இந்த இயக்கம் போற்றப்படுகிறது.”

“அந்தத் தோழர்கள் தான் எனது வணக்கத்திற்குரிய காவல் தெய்வங்கள். மதிமுக பொதுக்குழு, செயற்குழு, உறுப்பினர்கள் மாநில, மண்டல, நகர, பேரூர், சிற்றூர் நிர்வாகிகள் இந்த கட்சியின் காவல் தெய்வங்கள். எத்தனை சீட்டு கிடைக்கும்? எத்தனை சீட்டிலே ஜெயிக்க முடியும்? என்று கணக்கு போட்டுக்கொண்டு இங்கே நாங்கள் கூட்டணியில் உட்கார்ந்து இருக்க வில்லை.”

“நாங்கள் இதய சுத்தியோடு ஒரு கூட்டணி கட்சி செய்ய வேண்டிய கடமைகளை செய்து கொண்டு இந்த நாள் வரையிலும் ஒரு சொல் இந்த அரசை பற்றி நான் விமர்சித்தது கிடையாது. ஏன்? கூட்டணியில் இருக்கிறோம்.அந்த கூட்டணி தர்மத்தை பாதுகாப்போம் என்ற உணர்வோடு இருக்கிறேன்.அரசியலுக்கு வந்து 62 ஆண்டுகள் ஓடி மறைந்து விட்டன.”

“நான் மிஞ்சி இருக்கின்ற வருடங்கள் எத்தனை என்று எனக்குத் தெரியாது. ஆனால் என் மரணத்திற்கு பின்னும் வரலாறு எழுதப்படுகிற போது ஒருவரியாவது என்னை பற்றி அந்த வரலாறு எழுதும் என்ற நம்பிக்கையோடு இயற்கைக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *