தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி: வாக்கு திருட்டில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக கோரியும் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரிய பிரகாஷ் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்கு திருட்டில் ஈடுபட்ட இந்திய தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், பிரதமர் மோடி உடனடியாக பதவி விலக கோரி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அறிவித்தபடியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்தபடியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் அருகில் இளைஞர் காங்கிரஸ் கட்சி சார்பில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் மரியா ஆல்வின், தெற்கு மாவட்ட தலைவர் ராஜகுமாரன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் சூரிய பிரகாஷ் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தேர்தல் ஆணையத்திற்கும், ஒன்றிய மோடி அரசுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும், வாக்கு திருடனே உடனடியாக பதவி விலகு, துணை போகாதே துணை போகாதே, தில்லு முல்லுக்கு தேர்தல் ஆணையமே துணை போகாதே, என்று கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநகர மாவட்ட தலைவர் சி எஸ் முரளிதரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜான் பிரிட்டோ, மண்டல தலைவர் ஐசன் சில்வா, பொதுக்குழு உறுப்பினர்கள், காங்கிரஸ் எடிசன், சாமுவேல்ஞானதுரை, மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி பிரீத்தி வினோத், ஊடகப்பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் ஜான் சாமுவேல், மாவட்ட துணைத் தலைவர் ரஞ்சிதம் ஜெபராஜ், எஸ்சி பிரிவு மாநகர் மாவட்ட தலைவர் A.D.பிரபாகரன், வடக்கு மண்டல இளைஞர் காங்கிரஸ் தலைவி கமலா தேவி, மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் மீனாட்சி சுந்தரி, முன்னாள் மகிளா காங்கிரஸ் தலைவர் முத்து விஜயா, மாநில மீனவர் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் கென்னடிராஜ் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் பெண்கள் கலந்து கொண்டனர்.

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *