33% Women Reservation Signature Campaign Held in Ramanathapuram by Mahila Congress
- மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு அமல்படுத்த கோரி கையெழுத்து இயக்கம் – ராமநாதபுரத்தில் மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
- இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் TVK ஆதரவு கொண்டாட்டம்; மாநில தலைவி ராமலட்சுமி தலைமையில் கேக் வெட்டி கொண்டாடல்
ராமநாதபுரத்தில் மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி மகிளா காங்கிரஸ் சார்பில் கையெழுத்து இயக்கம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதை கொண்டாடும் வகையில், மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ராமலட்சுமி தலைமையில் ராமநாதபுரம் தாலுகா நகர் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இதற்கு முன்னதாக, மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டதுடன் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் முன்னாள் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் செல்லதுரை அப்துல்லா, வட்டார தலைவர் காருகுடி சேகர், மனித உரிமை மாவட்ட தலைவர் பசும்பொன் செய்யது அப்தாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் ஆனந்தி பாண்டியராஜன், புஷ்பா தேவி, தமிழரசி, சங்கீதா, அமீரம் நிஷா பாத்திமா உள்ளிட்ட மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
