எந்தக் கடவுளை வணங்குவது நல்லது?
நல்ல காரியங்களுக்காக நாம் பயணம் செல்லும்போது, எல்லா காரியமும் நல்லவிதமாக, வெற்றிகரமாக முடிய வேண்டும் என கடவுளிடம் வணங்குகிறோம் அல்லவா?
சரி, அப்படி பயணிக்கும் முன் எந்த சாமியிடம் வேண்டிக் கொள்வது என்றுதானே கேட்கிறீர்கள்.
தரைவழிப் பயணமாக இருந்தால், அதாவது பைக், கார், ஆட்டோ, பேருந்து அல்லது ரயில் மூலமாக நீங்கள் பயணிக்க வேண்டியிருந்தால், சுப்ரமணிய ஸ்வாமியை வணங்கிவிட்டு செல்வது மிகவும் நல்லது.
வானில் பறந்து பயணிக்கும்போது அதாவது விமானப் பயணத்திற்கு முன்னர் பரமேஸ்வரனை வணங்க வேண்டும்.
கப்பல், படகு போன்ற நீர்வழியில் பயணிக்கும்போது அதாவது கப்பல் அல்லது படகில் பயணிப்பதற்கு முன்னதாக மஹாவிஷ்ணுவை வணங்கிவிட்டுச் செல்வது நல்லது.
உங்கள் பயணம் இனிதாக அமையட்டும்!

