காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

இந்திய தேசிய காங்கிரஸின் 140 வது தொடக்க நாளை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது.

1885 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி தொடங்கப்பட்ட காங்கிரஸ் இயக்கம், இந்திய சுதந்திரத்திற்கு பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் ஆக மாற்றப்பட்டு இந்தியாவின் தேசியக் கட்சியாக உருவெடுத்து உள்ளது.

தற்போது 140 ஆவது துவக்க நாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் காங்கிரஸ் சார்பில் தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடி வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்ட நகர காங்கிரஸ் தலைவர் நாதன் சார்பில், காந்தி சாலையில் அமைந்துள்ள காமராஜர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி துவக்கநாளை சிறப்பாக கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியில், முன்னாள் மாவட்ட தலைவர் ஜீ.வி. மதியழகன், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாவட்ட பொறுப்பாளர் சீனிவாச ராகவன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு, பகுதி தலைவர்கள் காமராஜ், பட்டு காமராஜ், சப்தகிரி, மாவட்ட துணைத்தலைவர் தாரன், மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுமங்கலி, சீனிவாசன் டிபி, சீனிவாசன் சங்கரலிங்கம், நூல் கடை ராதாகிருஷ்ணன், மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் லியாகச் ஷெரிப், இளைஞர் அணி யோகி, பாலமுருகன், வஜ்ரவேல், குமார், லோகநாதன் செவிலிமேடு பிரபு, தென்னேரி சுகுமார், வையாவூர் லோகு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம்

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *