காஞ்சிபுரம் தொண்டை மண்டல வேளாளர் சங்க பேரவை மகாசபை கூட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சி காமராஜர் வீதியில் அமைந்துள்ள தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சங்க சமுதாய கூடத்தில், தொண்டை மண்டல வேளாளர் சங்க 2024-2025 பேரவை மகாசபை கூட்டம் தலைவர் ஜானகிராமன் தலைமையில், கௌரவ தலைவர் சம்பத் முன்னிலையில், செயல் தலைவர் கார்த்திகேயன் வரவேற்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு புதிய நீதி கட்சி பொதுச் செயலாளர் சமரசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இதனைத் தொடர்ந்து திருமுறை இசை மற்றும் திருப்புகழி இசை திருமுறை இசை கலாநிதி திருஞான கதிர்வேல் சுப்பிரமணியம் ஓதுவார் மூர்த்திகள் குழுவினர்கள் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து வள்ளுவன் கண்ட வேளாளர் விருது பெறும் விவசாயிகள் பழனி பிரபாகரன் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கினர். மேலும் கல்வி உதவித்தொகை பெரும் மாணவர்களுக்கு ஒவ்வொருவராக கௌரவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
இதில் தொண்டை மண்டல வேளாளர் சங்க உறுப்பினர்களின் மாணவர்கள்.
அதிக மதிப்பெண் பெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்கள் 29 நபர்களுக்கும், பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி பயின்ற 6 மாணவர்.
இந்நிகழ்ச்சியில் தொண்டை மண்டல வேளாளர் சங்க மகாசபை செயலாளர் பொன் சீனிவாசன், பொருளாளர் சுந்தரம், சட்ட ஆலோசகர் சங்கர், தணிக்கையாளர் ஜெயபாலன் மற்றும் துணைத் தலைவர்கள் ஜெயராமன், கன்னியப்பன், சிவகுமார், துணை செயலாளர்கள் தணிகாசலம், வெங்கடேசன், சத்திய நாராயணன், சந்தானகிருஷ்ணன், தீபா சிவகுமார், பிரகாசம், குமார் மற்றும் சங்க ஆலோசகர்கள் அண்ணாமலை, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் திருமுறை திருவிழாவை சிறப்பாக கொண்டாடிய நிர்வாகிகள் முருகேஷ் பச்சையப்பன் பிரபு மகேந்திரன் ஆகியோருக்கு பொன்னாடைகள் அணிவித்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் முடிவில் இணை செயலாளர் தணிகாசலம் நன்றியுரை வழங்கினார்.

