காஞ்சிபுரத்தில் ஸ்ரீ லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம்

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ லலிதாம்பாள் கல்யாண மகோத்சவம் கோலாகலமாக நடைபெற்றது.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் மாட வீதியில் அமைந்துள்ள கொல்லா சத்திரத்தில் ஸ்ரீ லலிதாம்பாள் கல்யாண மகோற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

இதில் காலை லலிதா தோடயமங்கலம், குரு தியானம், குரு கீர்த்தனை, அஷ்டபதி, ஸ்ரீ லலிதா ஸ்ரீ நகர வர்ணனை, அம்பாள் பூஜை, உபசாரம், தொடர்ந்து மங்கல தாரணம் சமர்ப்பித்து திருக்கல்யாண வைபவம் விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து ம சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மாலை மாற்றி கண்ணூஞ்சல், லாலி, நலங்கு, சிவன் அம்பாள் அலங்காரம் செய்யப்பட்டு திவ்ய நாமம், பின்னல்கும்மி கோலாட்டம் வைபவங்கள் சிறப்பாக நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஆர். வேணுகோபாலன், நிர்மலா வேணுகோபாலன் மற்றும் மண்டலி அங்கத்தினர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர். விழா ஏற்பாட்டாளர்களுக்கு காமாட்சி அம்மன்ஆலய பிரசாதங்கள் சுரேஷ் சாஸ்திரி அவர்களால் வழங்கப்பட்டது.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *