மதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் – மதவாத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மதுரையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம் – மதவாத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

மாநில காங்கிரஸ் தலைவரை கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்து தீண்டாமை போன்ற செயல்களில் ஈடுபடும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில் மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், தல்லாகுளம் முருகன், மகிளா காங்கிரஸ் சானவாஸ் பேகம், நளினி, ஹேமா மற்றும் பகுதி தலைவர்கள், வார்டு தலைவர்கள் மற்றும் சார்பு அணிகள் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் பேரியக்க தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

அப்போது அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி வல்லக்கோட்டை முருகன் கோயிலில் குடமுழுக்கு விழாவில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை அனுமதித்து, நமது சமத்துவ போராளி செல்வப்பெருந்தகை அவர்களுக்கு அனுமதி மறுத்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *