Congress Protest Against Tamil Nadu Governor Held in Ramanathapuram

Congress Protest Against Tamil Nadu Governor Held in Ramanathapuram
  • தமிழக ஆளுநரை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்
  • ஆட்சி அமைக்க அழைக்காததை எதிர்த்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் போராட்டம்

ராமநாதபுரத்தில் தமிழக பொறுப்பு ஆளுநரை கண்டித்து இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்த பின்னரும், ஆட்சி அமைக்க அழைக்காமல் தமிழக பொறுப்பு ஆளுநர் செயல்படுவதாக குற்றம்சாட்டி தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் அரண்மனை முன்பு, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஜோதி பாலன், சோபா ரங்கநாதன், குமார், நகர் தலைவர் கோபி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் மாநில, மாவட்ட, வட்டார, நகர மற்றும் பேரூர் நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *