காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் யானை வாகன உற்சவம் – மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி!
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் யானை வாகன உற்சவம் – மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி

கச்சபேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள ஆலயத்தில் சித்திரை உத்திர பெருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் 6ஆம் நாள் இரவு, கச்சபேஸ்வரர் யானை வாகனத்தில் எழுந்தருளி, நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில், டாக்டர் டி. சஞ்சீவி ஜெயராம் “எங்கும் நிறைந்த பரம்பொருள்” என்ற தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார்.
பின்னர், சத்தியசாரா நாட்டியாலயா மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டாக்டர் சஞ்சீவி ஜெயராம் மற்றும் முருகேஷ் கலந்து கொண்டு மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விழாவினை கண்டு ரசித்தனர்.

