காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் சித்திரை உத்திர திருத்தேர் உற்சவம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் சித்திரை உத்திர திருத்தேர் உற்சவம்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருத்தேரோட்டம் – சுந்தராம்பிகை சமேதமாக வீதி உலா, பக்தர்கள் திரளான தரிசனம்

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கச்சபேஸ்வரர் திருக்கோவில் இல் சித்திரை உத்திர பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

திருமால் ஆமை வடிவில் வந்து சிவபெருமானை வழிபட்ட திருத்தலம் என போற்றப்படும் இவ்வாலயத்தில், சுந்தராம்பிகை சமேத கச்சபேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை உத்திர பெருவிழா கடந்த 24ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் 7ஆம் நாள் (01.05.2026) , திருத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இதனை முன்னிட்டு சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் மாலைகள் அணிவித்து திருத்தேரில் எழுந்தருளச் செய்தனர்.

பின்னர் மேளதாளங்கள் முழங்க, தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் வடம் பிடித்து நான்கு ராஜ வீதிகளில் “அரோகரா” கோஷத்துடன் இழுத்துச் சென்றனர்.

வழியெங்கும் திரளான பக்தர்கள் காத்திருந்து தீபாராதனை காட்டி வணங்கி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கிருஷ்ணன் தெரு செங்குந்தர் சமுதாயம் சார்பில் தலைவர் சக்தி தலைமையில் வரிசை தட்டுகள் எடுத்துவரப்பட்டு ஆலயத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.

இதில் சமூக நிர்வாகிகள், ஆலய செயல் அலுவலர் திவ்யா, மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *