வைகை ஆற்றில் கள்ளழகர் – “கோவிந்தா” கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வைகை ஆற்றில் கள்ளழகர் – “கோவிந்தா” கோஷம் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

வைகை ஆற்றில் கள்ளழகர் 🙏
“கோவிந்தா! கோவிந்தா!” என முழங்கிய பக்தி வெள்ளம் ✨
லட்சக்கணக்கானோர் தரிசித்த அற்புத தருணம்!

மதுரையில் நடைபெற்ற கள்ளழகர் சித்திரை திருவிழா வைபவத்தின் முக்கிய நிகழ்வாக, கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், லட்சக்கணக்கான பக்தர்கள் “கோவிந்தா! கோவிந்தா!” என பக்தி கோஷம் எழுப்பினர். கைகளில் சர்க்கரை தீபம் ஏந்திய பக்தர்கள் மனமுருக கள்ளழகரை தரிசித்தனர்.

அழகர்மலை அடிவாரத்தில் உள்ள கள்ளழகர் கோவில் இலிருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர், நகரின் பல்வேறு பகுதிகளில் மண்டகப்படிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றை வந்தடைந்த கள்ளழகரை, வீரராகவ பெருமாள் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வைகை ஆற்றில் கள்ளழகர் மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நிகழ்ச்சியையொட்டி மதுரை நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. பலத்த காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, மருத்துவ மற்றும் அவசர சேவைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *