காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரர் ஆலய மண்டல அபிஷேக பூர்த்தி விழா
காஞ்சிபுரம் செவ்வந்தீஸ்வரர் ஆலயத்தில் மண்டலா அபிஷேக பூர்த்தி விழாவை ஒட்டி சிறப்பு கலசபிஷேகம் சங்க அபிஷேகம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் பஞ்சுப்பேட்டை பகுதியில் அமைந்துள்ள செவ்வந்தி சிறப்பு ஆலயத்தில் கடந்த ஜூன் 5 ஆம் தேதி அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து அன்னதினமும் மண்டல அபிஷேகம் நடைபெற்று வந்தது.

48 நாட்கள் நிறைவு விழாவில் சிறப்பு யாகசாலை பூஜைகள் நடைபெற்று மூலவர் செவ்வந்தீஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நடைபெற்றன.
விழா ஏற்பாடுகளை கெம்பு செட்டியார் குடும்பத்தினர் சேர்ந்த லதா சிவராஜன் வம்சத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டன.

