காஞ்சிபுரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்

காஞ்சிபுரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம்

காஞ்சிபுரம் அரசு நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, மாநகராட்சி ஆணையர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.

காஞ்சிபுரம் கோரிக்கை அரசு நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், மாநகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், எஸ் ஓ சுகவனம், நகர் நல அலுவலர் அருள் நம்பி, ஆய்வாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் ரத்த அழுத்தம் ரத்தத்தில் சர்க்கரை அளவு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் நடைபெற்றது. இதில் மண்டல குழு தலைவர்கள் சாந்தி சீனிவாசன், செவிலிமேடு மோகன் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் கார்த்திக், சங்கர், சோபனா, கண்ணன், ரமணி, பொன்னம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களும் சர்க்கரை நோய் உள்ள பயனாளிகளுக்கு மருந்துகளும், மாற்றுத்திறனாளி திட்டச்சார்பில் உதவி தொகைக்கான ஆடைகளும் கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வு ஊதியம் ஆணைகளும் வழங்கப்பட்டன. இதில் ஏராளமான கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *