காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் தெப்போற்சவத் திருவிழா
காஞ்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ கச்சபேஸ்வரர் தெப்போற்சவத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. தயாரம்மன் குளத்தில் இரண்டாம் நாள் 5 முறை வலம் வந்து கட்சபேஷ்வரர் பக்தர்களுக்கு அருள்பளித்தார்.

கோயில் நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை கட்சபேஸ்வரர் ஆலயம்.
ஆண்டுதோறும் பங்குனி மாதம் இத்திரு கோயிலில் இருந்து சுவாமி அம்பாள் இருவரும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள தாயார் குளம் பகுதியில் மூன்று நாள் தெப்ப உற்சவத்தில் பங்கேற்பது வழக்கம்.

அவ்வகையில் இந்தாண்டு தெப்ப உற்சவ விழா இன்று தொடங்கி மூன்று நாள் நடைபெறுகிறது.
இதில் இரண்டாம் நாள் விழாவில் திருக்கோயிலிலிருந்து அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு கச்பேஸ்வரர் சிறப்பு மலர் அலங்காரத்தில் வேகவதி ஆற்றங்கரையில் அமர்ந்துள்ள தாயார் குளக்கரையில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகளுக்கு பின் தெப்பத்தில் எழுந்தருளினார்.

இரண்டாம் நாள் தெப்ப உற்சவத்தில் 5 முறை திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழா உபயத்தினை பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்த என். நடராஜன் சசிகலா குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
இதில் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சுதா என்கின்ற சுப்பராயன் குமரவேல், கலைமாமணி வடிவேலு ஐயா. கோல்ட் ரவி உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தீப ஆராதனை செய்து குடும்ப நலம் வேண்டி இறையருள் பெற்றனர்.

இதனைத் தொடர்ந்து மண்டபம் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பொய் தேர் ஆலயத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும் பொய்யாமொழி விநாயகர ஆலயத்தில் மண்டகப்படி கண்டறியினார் இங்கு கோபால் குடும்பத்தினர் உபயத்துடன் சிறப்பு வரிசைகள் வைக்கப்பட்டு தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து உபயதாரர்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கோபால் சகோதரர்கள் பரசுராமன், லிங்கவேல், கண்ணபிரான், லோகு, பரமானந்தம். உள்ளிட்டோர் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.


