தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.30-ல் வெளியாக வாய்ப்பு!
தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வரும் 30ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேர்தல் தயாரிப்பு அறிக்கை குழுவினர் காஞ்சிபுரத்தில் தெரிவித்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதன்மை பணியான தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் அறிக்கைகள் குறித்து கருத்து ஏற்றுக் கூட்டங்கள் நிர்வாகிகள் இடையே நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் தமிழக காங்கிரஸ் சார்பில் கார்த்திக் சிதம்பரம் தலைமையிலான தேர்தல் தயாரிப்பு அறிக்கைகளும் பல்வேறு மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகள் இடையே மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக கருத்து கேட்டு வருகின்றனர்.

அதன் அடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் ஹோட்டல் அரங்கில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ் தலைமையில் நிர்வாகிகள் கருத்து கேட்டு கூட்டம் நடைபெற்றது.
இதில் தேர்தல் அறிக்கை குழு உறுப்பினர்கள் கோபண்ணா மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் காஞ்சிபுரம் உத்திரமேரூர் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் பகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள் தங்களது பகுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து எடுத்துரைத்து தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், மாவட்ட வாரியாக தேர்தல் அறிக்கைகள் குறித்த கருத்து கூட்டம் நடைபெற்று வருகிறது.
அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு வரும் 30ஆம் தேதி தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியாக வாய்ப்பு உள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் காஞ்சி ஜிவி மதியழகன், மாநகரத் தலைவர் நாதன், மாநகராட்சி துணை மேயர் குமரகுருநாதன், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் பத்மநாபன், அரங்கநாத நகர் அன்பு மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பூக்கடை மணிகண்டன், ஓ பி ஜி அணி சாதிக் பாஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முருகன் சாந்தகுமார், மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் கதிரவன், மாநில எஸ்சி எஸ்டி பிரிவு பொதுச்செயலாளர் கன்னியப்பன், தென்னேரி சுகுமார், யோகி, நகரத் தலைவர்கள் சுரேஷ், திருமலை வட்டாரத் தலைவர்கள் பிச்சாண்டி, சம்பத், மணிகண்டன், புஷ்பராஜ், நிக்கோலஸ், ஆதிகேசவன், சிவகுமார், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சுமிதாபாய், நகர சிறுபான்மை பிரிவு தலைவர் பவித்ரா உள்ளிட்டா பற்றி நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.


