காஞ்சிபுரம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் சார்பில் ஸ்டார் மண்டல குடும்ப சந்திப்பு விழா

காஞ்சிபுரம் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் சார்பில் ஸ்டார் மண்டல குடும்ப சந்திப்பு விழா மண்டல தலைவர் 3 லயன்ஸ் குமரேசன் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் எம் எம் அவர்கள் பகுதியில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்களின் சார்பில் ஸ்டார் மண்டல குடும்ப சந்திப்பு விழா நடைபெற்றது.
மண்டல தலைவர் 3 லயன்ஸ் டி குமரேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செயலான்மை குழு தலைவர் லயன்ஸ் எல் சசிகுமார் வரவேற்புரை ஆற்றினார்.

மாவட்ட ஆளுநர் லயன்ஸ் என்டி பாஸ்கரன் துவக்க உரையாற்றினார் சிறப்பு அழைப்பாளராக பன்னாட்டு இயக்குனர் லயன்ஸ் எஸ். மகேஷ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
முதன்மை சிறப்பு விருந்தினராக திரு சி பாலாஜி பாபு கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார்.
இதில் லயன்ஸ் எஸ் சுரேஷ், லயன்ஸ் டாக்டர் எஸ். பூர்ண சந்திரன், லயன்ஸ் ரவி லயன் ஹரிதாஸ் ஆகியோர் கனி உரை ஆற்றினார்கள்.

இதில் லயன்ஸ் ராமலிங்கம், மண்டல ஆலோசகர்கள் லயன்ஸ் வி எஸ் ராமகிருஷ்ணன், லயன்ஸ் டி ராம் பிரசாத், லயன்ஸ் வி சேகர், லயன்ஸ் எம் ஜவர்கலால், லயன்ஸ் எஸ் யுவராஜ், லயன்ஸ் தவமணி, செயலான்மை குழு தலைவர் லயன்ஸ் எல் சசிகுமார், செயலாளர் எஸ் சுபாஷ்ராஜன், பொருளாளர் லயன்ஸ் எ கோபால், ஒருங்கிணைப்பாளர் லயன்ஸ் ஜி ராஜமாணிக்கம், வட்டார தலைவர்கள், லயன்ஸ் ஆர் பூபதி, லயன்ஸ் கே. ஆபத்தகாயம், லயன்ஸ் எஸ் கே மகேஷ் விழாவினை ஏற்று நடத்தும் சங்கமான அண்ணா சங்கத்தை சேர்ந்த தலைவர் லயன்ஸ் பி கிருபாகரன், செயலாளர் கே முரளி, பொருளாளர் கே உமாபதி மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள், மேலாண்மை முன்னாள் மாவட்ட ஆளுநர்கள், மண்டல அறிக்கையினை எஸ். சீனிவாசன், வெங்கடாஜலபதி ஆகியோர் வாசித்தனர்.

மேலும் மண்டல தலைவர்கள் ஆரிப் அகமது, பகவத் கீதா, மோகன் ராஜி, ஜெயவேலு, சுந்தரமூர்த்தி, தேவராஜ், வி சுந்தரம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
விழாவினை லயன்ஸ் டாக்டர் பி. சந்திரசேகரன் தொகுத்து வழங்கினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் செயலாளர் லயன்ஸ் எஸ். சுபாஷ் ராஜன் நன்றிகளை தெரிவித்தார்.


