சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட மாணவர்களுக்கு பாராட்டு
 
					சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் அருள்ராஜ் மாணவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளரும், திருப்பெரும்புதூர் நகராட்சி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான தலைவர் S.A.அருள்ராஜ் அவர்கள் சுதந்திர தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பள்ளி வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
சுதந்திர தின சிறப்புரையாற்றிய அவர், பள்ளி மாணவிகள் கடந்த காலத்தில் புரிந்த சாதனைகளை விளக்கி மாணவர்களை பாராட்டினர்.

தனது சிறப்புரையில், “திருப்பெருமந்தூர் சட்டமன்றத் தொகுதியில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்ட இந்த பள்ளியில், கடந்த காலங்களில் பல மாணவிகள், மருத்துவர்களாகவும், வழக்கறிஞர்களாகவும், விமான ஓட்டிகளாகவும், கல்வி பயில்வதை நினைத்து, பெருமிதம் கொள்வதோடு, சிறந்த தமிழச்சிகளாக, சிங்க பெண்மணிகளாக, தற்காப்பு கலைகளிலும் விளையாட்டுத் துறைகளிலும் முன்னேறி வருவது, பெருந்தலைவர் காமராஜர் கண்ட கனவு நிறைவேறுகிறது என்பதில் பெருமிதம் கொள்வதில் பெருந்தலைவர் காமராஜரின் சீடனாக இந்தப் பள்ளியின் மாணவிகளுக்கும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்” என்பதை பதிவு செய்தார்.

மேலும், “வருங்காலத்திலும் இந்த பள்ளியின் முன்னேற்றத்திற்கு நிச்சயமாக பெற்றோர் ஆசிரியர் கழகம் எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் உறுதுணையாக இருக்கும் என்பதை உளமாறக் கூறிக்கொண்டு மீண்டும் ஒருமுறை சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் S.A.அருள்ராஜ் பதிவு செய்தார்.


 
			 
			 
			 
			 
			