காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் 100% வாக்களிக்க வேண்டி தீர்மானம்
காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் 100% வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் உள்ள தனியார் கூட்டுறங்கில் காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணைத்தலைவர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார்.
மாநில துணைத்தலைவர் கோபால், மாநில இணை செயலாளர் செல்வகுமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் தசரதன், பொருளாளர் கான்சா மொய்தீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் காஞ்சிபுரம் வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் வேலுமணி தலைமை தாங்கி விழாவினை சிறப்பாக நடத்தினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில கூடுதல் செயலர் பிரபாகரன், மாநில துணைத்தலைவர் உத்திர குமார், மாநில தலைமைச் செயலாளர் பேராசிரியர் ஆர் ராஜ்குமார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் மே மாதம் ஐந்தாம் தேதி திருவாரூரில் நடைபெற உள்ள தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடைபெற உள்ள சிறப்பு மாநாட்டிற்கு அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

அனைத்து வியாபாரிகளும் தங்குவதற்கும் உணவு மற்றும் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து அனைவரும் 100% வாக்களித்து நமது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதில் சாலையோர வியாபாரிகள் மாநிலத் தலைவர் கே என் மூர்த்தி, சின்ன காஞ்சிபுரம் அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜுவேல், ஓரிக்கை அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் கோட்டி, காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விஜயகணேஷ், பொருளாளர் பொன்னுசாமி உள்ளிட்ட சங்கம் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் A.C.குமார் நன்றிகளை தெரிவித்தார்.




