ராமநாதபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

ராமநாதபுரத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

பெரியாரிய உணர்வார்கள் கூட்டமைப்பின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் தந்தையாக போற்றப்படும் புரட்சியாளர் சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்த நாளை முன்னிட்டு, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில், ராமநாதபுரம் மாவட்டம் புல்லந்தை கிராமத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு பெரியார் பேரவை தலைவர் க.நாகேசுவரன் அவர்கள் தலைமையேற்று, ஆதித்தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் ம.உதயகுமார் அவர்கள் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில், ஆதித்தமிழர் கட்சியின் தென் மண்டல செயலாளர் தோழர் க.பாஸ்கரன், தென் மண்டல செய்தி தொடர்பாளர் தோழர் அறிவரசு, தோழர் இரணியன், தோழர் காளிதாஸ், தோழர் பெருமாள், தோழர் ரஞ்சித், தோழர் ரியாஸ் கான் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டு அண்ணல் அம்பேத்கரின் வாழ்வியல் கொள்கையான சாதி ஒழிப்பு, சமத்துவம், சமூக நீதி” என்ற உயரிய இலக்குகளை பொதுவாழ்வில் நடைமுறைப்படுத்தி பாசிசத்தை வேரறுத்து சமூகநீதியை நிலை நாட்ட வேண்டுமென முழக்கமிட்டு புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

அவரின் சிந்தனைகள் என்றும் நம் வழிகாட்டியாக இருந்து, சமத்துவமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *