காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா
காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பல்வேறு சிவாலயங்களில் பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

அந்த வகையில் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த முத்தீஸ்வரர் ஆலயத்தில் அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் நந்தி பகவான் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
இதில் பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் கலந்துகொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அறங்காவலர் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழா உபயோகித்தினை சுந்தரம் நாயக்கர் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இவர்களுக்கு ஆளை நிர்வாகம் தரப்பில் பிரசாதங்களும் பொன்னாடைகளும் அணிவித்து ஆசி வழங்கப்பட்டது.
இதேபோல் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள கச்சபஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் நந்தி வாகனத்தில் பிரதோஷ பகவான் எழுந்தருளி ஆளே வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பேரருளை சென்றனர்.

