காஞ்சிபுரத்தில் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரத்தில் ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி

அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடக்கம்
தமிழர் திருநாளாம் பொங்கலை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.3,000 ரொக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி காஞ்சிபுரம் வைகுண்டபுரம் தெருவில் உள்ள ரேஷன் கடையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் திமுக கழக முன்னோடிகள், 18-ஆவது வட்ட நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் வி.எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் 18-ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் மல்லிகா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பொங்கல் திருநாளை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் வழங்கப்படும் இந்த நலத்திட்ட உதவிகள் பயனுள்ளதாக இருக்கும் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
திராவிட மாடல் ஆட்சி தொடர பாடுபடுவோம்
தொடர்ந்து, தமிழர் திருநாளான பொங்கலை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்றும், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தொடர அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் திமுக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

