காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா

காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா காலை அறங்காவலர் குழு தலைவர் சரவணகுமார் தலைமையில் விமர்சையாக நடைபெற்றது. காஞ்சிபுரம் காந்தி சாலையில் அமைந்துள்ள பழமை வாய்ந்த அருள்மிகு முத்தீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 இதில் மூலவர் முத்தீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிரதோஷ பகவான் நந்தி வாகனத்தில் எழுந்தருளி ஆலய வளாகத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனை தொடர்ந்து சிறப்பு தொடர்ந்து தீபாரதனைகள் ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் குழு தலைவர் தலைமையில் அறங்காவலர்கள் தசரதன், கடம்பன், பாலச்சந்தர், ஏகாம்பரம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விழா உபயத்தினை சுந்தரம் நாயக்கர் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானின் பேரருளை பெற்று சென்றனர்.

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *