உத்தரமேரூர் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் குடியரசு தின விழா பேரணி
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 77வது குடியரசு தின விழா பேரணி மாவட்டத் தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் ஸ்ரீபெரும்புதூர் எஸ்ஏ அருள்ராஜ் தலைமையில் குடியரசு தின பேரணி நடைபெற்றது.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ஜீவி மதியழகன், துணை மேயர் குமரகுருநாதன், மாநில எஸ்சி எஸ்டி பிரிவு பொதுச்செயலாளர் கன்னியப்பன், காஞ்சிபுரம் நகர தலைவர் நாதன், மாவட்டத் துணைத் தலைவர் தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் சுகுமார் அனைவரையும் வரவேற்றார்.

முன்னதாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பின் தொடங்கிய பேரணியானது சன்னதி தெரு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பேரணியாக சென்று இறுதியில் அம்பேத்கர் சிலை அருகே பேரணி நிறைவடைந்தது.
இதை தொடர்ந்து அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் மேகநாதன், ஆதிகேசவன், பேரூர் தலைவர்கள் சுரேஷ், திருமலை. லயன் குப்புசாமி, முத்து கணேசன், ஆசிரியர் நிக்கோலஸ், இளைஞர் அணி யோகி லோகநாதன், தென்னேரி சுகுமார், பிரபு உட்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

