காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி காமாட்சி ஆலய பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி காமாட்சி ஆலய பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள்

காஞ்சிபுரம் சங்கர மடத்தில் காஞ்சி காமாட்சி ஆலய பிரம்மோற்சவத்தை ஒட்டி பத்திரிகை வைத்து ஆசி பெறப்பட்டது.

காஞ்சிபுரத்தில் உள்ள சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் வரும் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் துவங்க உள்ளது.

இந்நிலையில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய ஸ்ரீ காரியம் சுந்தரேஸ் ஐயர் தலைமையில் சங்கராச்சாரியார் சுவாமிகளிடம் பத்திரிகை சமர்ப்பித்து ஆசி பெற்றனர்.

இதனை தொடர்ந்து மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் பிருந்தாவனத்தில் பத்திரிகை வைத்து ஆசி பெறப்பட்டது. இதில் ஆலய மணியக்காரர் சூரி ஸ்தானிகர்கள் நடராஜ சாஸ்திரிகள், கார்த்திக் சாஸ்திரிகள், ஸ்ரீ தர் சாஸ்திரிகள், ஷாம் சாஸ்திரிகள், ஸ்ரீகாந்த் சாஸ்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *