காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம்: சங்கர மடத்தில் பத்திரிகை வைத்து ஆசி

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம்: சங்கர மடத்தில் பத்திரிகை வைத்து ஆசி

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலய பிரம்மோற்சவம்: சங்கர மடத்தில் பத்திரிகை வைத்து ஆசி

சங்கராச்சாரியார் சுவாமிகளிடம் அழைப்பிதழ் சமர்ப்பித்து சிறப்பு வழிபாடு

காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில், வரும் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்க உள்ள நிலையில், அதற்கான பத்திரிகை காஞ்சிபுரம் சங்கர மடத்தில் வைத்து ஆசி பெறப்பட்டது.

காமாட்சி அம்மன் ஆலயத்தின் ஸ்ரீகாரியம் சுந்தரேஸ் ஐயர் தலைமையில் ஆலய நிர்வாகத்தினர் காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு சென்று, சங்கராச்சாரியார் சுவாமிகளிடம் பிரம்மோற்சவ விழா பத்திரிகையை சமர்ப்பித்து ஆசி பெற்றனர்.

மகா பெரியவர் பிருந்தாவனத்திலும் பத்திரிகை வைத்து வழிபாடு

இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கர மடத்தில் அமைந்துள்ள மகா பெரியவர் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்திலும் பிரம்மோற்சவ விழா பத்திரிகை வைத்து சிறப்பு வழிபாடு செய்து ஆசி பெறப்பட்டது.

காமாட்சி அம்மன் ஆலய பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்றும், விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனின் அருளைப் பெற வேண்டும் என்றும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டது.

ஆலய நிர்வாகிகள் பங்கேற்பு

இந்த நிகழ்வில் ஆலய மணியக்காரர் சூரி, ஸ்தானிகர்கள் நடராஜ சாஸ்திரிகள், கார்த்திக் சாஸ்திரிகள், ஸ்ரீதர் சாஸ்திரிகள், ஷாம் சாஸ்திரிகள், ஸ்ரீகாந்த் சாஸ்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பத்திரிகை வைத்து ஆசி பெற்ற நிகழ்வு பக்தர்களிடையே ஆன்மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் பிரம்மோற்சவம்: சங்கர மடத்தில் பத்திரிகை வைத்து ஆசி

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *