காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கணேஷ் டைல்ஸ் அண்ட் இன்டிரியஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா

காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கணேஷ் டைல்ஸ் அண்ட் இன்டிரியஸ் புதிய ஷோரூம் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் ஸ்ரீ கணேசா மில் நிறுவனர் திரு கே ஆர் பட்டேல் அவர்களால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் கணேஷ் ஷாமில், ஹார்டுவேர்ஸ் ஆகியவை மூலம் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.
அந்த வகையில் கலெக்டர் ஆபீஸ் ரோடு பகுதியில் ஸ்ரீ கணேஷ் டைல்ஸ் அண்ட் இன்டீரியர்ஸ் புதிய ஷோ ரூம் திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பிரகாஷ் உரிமையாளர் பிரகாஷ், பச்ச பாஸ் சில்க்ஸ் உரிமையாளர் பச்சையப்பன், பிரபு ராஜம் செட்டி நகைக்கடை உரிமையாளர் உதயகுமார், இன்ஜினியர் பிரகாஷ், மாவட்ட திருமண மண்டப உரிமையாளர் சங்கத் தலைவர் கிஷோர் குமார், டாக்டர் சத்ய நாராயணன், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில செயலாளர் பரணிதரன், தினேஷ் வி பட்டேல் ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

இதில் ரோட்டரி இன்டர்நேஷனல் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர் பரணிதரன், “நமது காஞ்சி நமது பெருமை” என்ற டைல்ஸை திறந்து வைத்தார்.
எஸ் காஞ்சிபுரம் தலைவர் லைன் யூ கோகுலகிருஷ்ணன், திருவள்ளுவர் திருஉருவப்படத்தின் டைல்ஸ் திறந்து வைத்தார்.
இதில் வேணு முதலியார், பாபு ஆனந்தா சில்க்ஸ் உரிமையாளர் மாணிக்கவேலு, சரவணா & கோ உரிமையாளர் சரவணன், தர்ஷன் டிவி உரிமையாளர் பத்மநாபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்கள் அனைவருக்கும் லைன் போபட் லால், ரொட்டேரியன், மணிலால், பொன்னாடைகள் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி நன்றிகளை தெரிவித்தனர்.


