2026-ல் திமுக வெல்லும் – நடிகர் விஜய்க்கு அமோக ஆதரவு இருக்கு – நடிகர் பஷீர்

2026-ல் திமுக வெல்லும் – நடிகர் விஜய்க்கு அமோக ஆதரவு இருக்கு – நடிகர் பஷீர்

விஜய்க்கு பெரிய ஆதரவு இளைஞர் மத்தியில் உள்ளது ஆனால் அது எந்த அளவுக்கு ஓட்டாக மாறும் என்பது தேர்தல் சமயத்தில் தான் தெரியும் என மதுரையில் நடிகர் பசும்பொன் படத்தில் நடித்த நடிகர் பஷீர் தெரிவித்துள்ளார்.

தேசியத் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பசும்பொன் திரைப்படத்தில் நடித்த நடிகர் பஷீர் மதுரை தனியார் விடுதியில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது, “பல சோதனைகளை தாண்டி தான் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப்பட்டுள்ளது. பசும்பொன் திரைப்படம் ஒரு சில நாட்களில் வெளியாகும் தேதி குறித்து அறிவிப்பு வரும் என்றார்.

இன்று அரசியலில் பல சர்ச்சைக்குரிய விஷயங்கள் நடைபெற்று வருகின்றன.
அந்த பிரச்சனைகள் எல்லாம் முடிந்து இயல்பான நிலைக்கு தமிழகம் திரும்ப வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா வேடம் போடுவதற்கு நான் மூன்று வருடம் என் வாழ்க்கையை அதற்காக அர்ப்பணித்தேன்.

என் இயல்பு வாழ்க்கையைத் துறந்து தேவர் ஐயாவின் சிந்தனைகளையும் செயல்களையும் உடல் மொழிகளையும் உள்வாங்கிக் கொண்டு படத்தில் நடித்துள்ளேன் படத்தில் நடிக்கும் போது ஒரு சித்தராக அவர் எவ்வாறு வாழ்ந்தாரோ அதேபோல் வாழ முயற்சி செய்கிறேன்.

நான் ஒரு இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவனாக இருந்தாலும் எங்கள் இஸ்லாமிய தாயின் தாய்ப்பால் குடித்து வளர்ந்த தேவர் ஐயாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நான் நடித்தது பெருமையாக உள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு என முதல்வர் கூறி உள்ளது புது விஷயம். தமிழர்கள் அனைவரும் ஓரணிகள் என்று தமிழகத்தை நம்பர் ஒன் மாநிலமாக மாற்ற வேண்டும்.

லாக்கப் மரணங்கள் எல்லா ஆட்சியிலும் இருந்தது. சாத்தான்குளம் பிரச்சனை போல தற்போது இந்த பிரச்சனையும் உருவாகியுள்ளது. எந்த ஒரு முதல்வரும் இதுவரை மன்னிப்பு கேட்பதாக வரலாற்றில் இல்லை. ஆனால் முதல்வர் மன்னிப்பு கேட்டு உள்ளார். மன்னிப்பு கேட்டதால் முதல்வர் மாமனிதராக ஆகி உள்ளார் எனத் தெரிவித்தார்.

யார் என்ன வேணாலும் பேசலாம். ஒரு வீட்டை வழி நடத்துவது எவ்வளவு கஷ்டம். ஆனால் ஒரு நாட்டை வழி நடத்துவது எளிதல்ல முதல்வர் சிறப்பாக வழி நடத்துக்கிறார்.

முதல்வர் மன்னிப்பு கேட்டது எந்த முதல்வரும் வரலாற்றில் கேட்காத ஒன்றை செய்துள்ளார் தவறு நடந்துள்ளது. அதை நேரடியாக அவர்களுடன் குடும்பத்துடன் அந்த பையனின் தாயாரிடம் உரையாடியது உண்மையான குற்றவாளிக்கு தண்டனை வாங்கித் தருவேன்.

2026 ஆம் ஆண்டு தேர்தல் மிக சவாலானதாக அமையும். விஜய்க்கு பெரிய ஆதரவு இளைஞர் மத்தியில் உள்ளது ஆனால் அது எந்த அளவுக்கு ஓட்டாக மாறும் என்பது தேர்தல் சமயத்தில் தான் தெரியும்.

வடிவேலுக்கு கூடாத கூட்டம் அல்ல. ஆனால் அதற்கு ஓட்டாக மாறியதா என்று தெரியாது.சிரஞ்சீவி ஆந்திராவில் கூடிய கூட்டத்தை விடவா. விஜய்க்கு ஆனால் திரும்ப

பெரும்பாலான ரசிகர்கள் இளைஞர்கள் ஆதரவு நிச்சயமாக உள்ளது அது வாக்காக மாறுமா என்பது புரிஞ்சிருநதான் பார்க்க.

நண்பர் முக்குலத்தோர் சமூகத்தை சார்ந்தவர் என்னுடைய உயிர் நெருங்கிய நண்பர் அவர் என்னிடம் நீங்கள் எங்கள் ஐயா மாதிரி உள்ளீர்கள் நீங்கள் அவரைப் போல வேடம் அணிந்து பார்க்க வேண்டும்.

நான் வேடமிட்ட உடன் தேவர் ஐயாவை போல உள்ளீர்கள் என்று கூறி அதுதான் இந்த படத்திற்கு ஆரம்ப சுழியாக அமைந்தது. அதனை தொடர்ந்து இந்த படம் நடித்து முடித்து விரைவில் வெளிவர வருகிறது,

பல தலைவர்கள கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை தான். நூறு படங்களில் நடித்தால் எந்த அளவு மரியாதை கிடைக்குமோ அந்த அளவுக்கு மரியாதை எனக்கு இந்த ஒரு படத்தில் கிடைக்கும்.

நான் மதுரைக்கு ஒவ்வொருமுறை வரும்போது என்னை தேவராகவே பார்த்து பலர் என் காலில் விழுவது எனக்கு நெகிழ்ச்சியாக உள்ளது. அந்த அளவுக்கு தேவர் ஐயா வாழ்ந்த வாழ்க்கை ஒரு சித்தர் வாழ்க்கை.

பசும்பொன் படத்திற்கு இசைஞானி சிறந்த இசையை கொடுத்துள்ளார். படம் விரைவில் வெளியாகும் நான்கு வருடங்களாக படம் வெளியாவதில் தாமதம் சவால்கள் சிக்கல்கள் இருந்தன தற்போது தீர்க்கப்பட்டுள்ளது விரைவில் படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்.

உழவர் மகன் படத்தில் இயக்கிய இயக்குனர் தான் இந்த படத்த இயக்குனர் மூன்று வருடம் கடினமான உழைப்பை போட்டுள்ளார்.

பல மறக்க முடியாத நினைவுகள் இந்த படத்தில் உள்ளது குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அய்யாவின் மரண கட்சியை படப்பிடிக்கும் போது என்னை மண்ணில் வைத்து மூடினார்கள்,

ஐயா இறந்தபோது அவரை அடக்கம் செய்யும் போது இயற்கையாகவே மழை வந்தது அதேபோல நாங்கள் இந்த கிளைமாக்ஸ் காட்சியை எடுக்கும் போது இயற்கையாகவே மழை வந்தது.

பசும்பொன் கிராமத்தில் தான் கிளைமாக்ஸ் காட்சியை எடுக்க திட்டமிட்டிருந்தோம் அங்கு எடுக்க முடியாததால் திருவண்ணாமலை பகுதியில் ஒரு கிராமத்தில் அந்த காட்சியை எடுத்துள்ளோம் என்றார்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *