ராஜிவ் காந்தி பிறந்த நாள்: மதுரையில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை செல்லூர் அய்யனார் கோவில் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கதன் மற்றும் பெருந்தலைவர் நடிகர் திலகம் அறக்கட்டளையின் சார்பாக ராஜீவ்காந்தி படத்திற்கு பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி முத்துக்குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நிர்வாகிகள் பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் ஜி.முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் கே.ஆர்.சுரேஷ்பாபு, நாஞ்சில்பால் ஜோசப், காங்கிரஸ் தொழிற்சங்க பிரிவு செயலாளர் எம்.போஸ் மற்றும் வார்டு நிர்வாகிகள் எம்.பாலமுருகன், மொக்கச்சாமி, பால்ராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

