என்னை வைத்து ஓட்டுவது அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் – செல்லூர் ராஜு

என்னை வைத்து ஓட்டுவது அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் – செல்லூர் ராஜு

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீட்டில் 200 கோடி கொள்ளை குறித்த கேள்விக்கு? தன்னை ஓட்டுவதை அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள் என பேசியுள்ள செல்லூர் ராஜூ, மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் வருவாய் இழப்பு நடைபெற்றது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமையில் அதிமுக மாமன்ற கவுன்சிலர்கள் மதுரை மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜு பேசுகையில், “மதுரையில் நூறு மாநகராட்சி வார்டுகளில் மொத்தம் சுமார் 3 லட்சத்து 60 ஆயிரம் கட்டடங்கள் இருக்கிறது. வணிக கட்டடங்கள் குடியிருப்பு கட்டடங்கள் தியேட்டர் மற்றும் இதர அரசு அலுவலகங்கள் உள்ளன.

இதற்கு மாநகராட்சி ஏ பி சி என மூன்று கேட்டகிரியில் வரி விதிக்கிறது. ஆண்டுக்கு மாநகராட்சிக்கு அரசுத்துறை இல்லாமல் 275 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் வருகிறது.

வணிக கட்டடங்களும் உண்டான வரியை விதிக்காமல் குடியிருப்பு வரியை விதிக்கிறார்கள். இது மாநகராட்சி நிர்வாகத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து அதிமுக கவுன்சிலர்கள் முறையிட்டபோது , நடவடிக்கை எடுக்கப்படும் என அன்றைய மாநகராட்சி ஆணையாளர் தினேஷ் குமார் கூறியிருக்கிறார்.

150 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இதில் திமுகவினர் அதிகம். எட்டு பேர் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மாநகராட்சி வருவாய் இழப்பு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து அதிகாரிகளையும் கைது செய்ய வேண்டும் என அதிமுக கோரிக்கை விடுக்கிறது.

உயர் அதிகாரிகளின் பாஸ்வேர்டு எப்படி திருடப்படும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

ஆணையாளர், உதவி ஆணையாளர், பில் கலெக்டர், வருவாய் உதவி ஆணையாளர் அவர்களின் பாஸ்வேர்ட் திருடப்பட்டு இருக்கிறது.மதுரை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் மாநகராட்சி மண்டல தலைவர்கள் பெண்களாக இருப்பதால் அவரது கணவர்கள் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள்.

சாதாரண மக்கள் வீடு கட்ட முயற்சி செய்தால் அதிகாரிகள் கவுன்சிலர்களோடு இணைந்து மக்களை மிரட்டி, லஞ்சம் கேட்கிறார்கள்.

வரிவிதிப்பு முறைகேட்டில் கைது செய்யப்பட்ட அதிகாரிகளை காப்பாற்றுவதற்கு ஆளுங்கட்சி நிர்வாகிகள் உதவி செய்கிறார்கள்.

நாங்கள் பூனை எலியை கபூபதி போல கபூகிறோம், ஆனால், கம்யூனிஸ்ட் கட்சி நானும் ரவுடிதான் என்று சொல்வது போல பெட்டிசன் கொடுக்கிறார்கள்.”

200 கோடி ரூபாய் உங்கள் பண்ணை வீட்டில் திருடு போய்விட்டதே என்ற கேள்விக்கு?., “என்னை வைத்து ஓட்டுவது அப்புறம் பார்த்துக் கொள்ளுங்கள். மாநகராட்சி ஊழல்தான் முக்கியம் மிகப்பெரிய சம்பவம் நடந்துள்ளது. இதை கொண்டு வருவதற்கு விளக்கம் கேட்கிறீர்களா?” என செல்லூர் ராஜு பேசினார்

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *