சோனியா காந்தி 79வது பிறந்த தினத்தை முன்னிட்டு கோட்டைவாசல் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 79 வது பிறந்த நாள் விழா, ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கொண்டாடப்பட்டது.
சோனியா காந்தி 79வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவர் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டி ராமநாதபுரம் அரண்மனை அருகே உள்ள கோட்டைவாசல் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தாலுகா நகர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்விற்கு மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினரும், நகர்மன்ற உறுப்பினருமான ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார்.
திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கரு.மாணிக்கம் கேக் வெட்டி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் நலிந்தோர், கட்சி நிர்வாகிகளுக்கு வேட்டி, சேலை, மதிய உணவு வழங்கப்பட்டது.
இதில் மாநிலச் செயலர் ஆனந்த குமார், பொறுப்புக்குழு உறுப்பினர் ஜோதிபாலன், மாவட்ட துணைத் தலைவர் காமராஜ், வட்டாரத்தலைவர்கள் காருகுடி சேகர், சேதுபாண்டியன், அன்வர் அலி நத்தர் ஷா, சுப்ரமணியன், ராமநாதபுரம் நகர் தலைவர் கோபி, ஓபிசி அணி மாவட்ட தலைவர் பாஸ்கர சேதுபதி, ராணுவப் பிரிவு தலைவர் கோபால், பாம்பன் நகர் தலைவர் ரிச்சர்ட் உள்பட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

