மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு! +2 தேர்ச்சி போதும்!!

மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்பு! +2 தேர்ச்சி போதும்!!

ஸ்டாப் செலக்சன் கமிஷன்(SSC) – ஸ்டெனோகிராபர் கிரேடு ‘‘C’’ மற்றும் ‘‘D’’ தேர்வு- 2025.

தகுதி

பிளஸ் 2 தேர்ச்சி.

இந்தி அல்லது ஆங்கிலத்தில் கிரேடு ‘D’ பிரிவுக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், கிரேடு ‘C’ பிரிவுக்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்

நிமிடத்திற்கு 50 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு

ஸ்டெனோகிராபர் கிரேடு ‘C’ பணிக்கு 18 முதல் 30 வயதிற்குள்ளிருக்க வேண்டும்.
கிரேடு D பணிக்கு 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அதிகபட்ச வயது வரம்பில் SC/STயினருக்கு 5 ஆண்டுகளும், OBCயினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.

வயது வரம்பு 01.08.2025 தேதியின்படி கணக்கிடப்படும்.

கட்டணம்

ரூ.100/-. ஆன்லைனில் செலுத்த வேண்டும் அல்லது ஸ்டேட் வங்கி செலானை பயன்படுத்தி பணமாக செலுத்த வேண்டும்.

பெண்கள்/SC/ST/மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் கிடையாது.

ஸ்டாப் செலக்சன் கமிஷனால் நடத்தப்படும் ஸ்டெனோகிராபர் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் சுருக்கெழுத்து எழுதும் திறன் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஆன்லைனில் நடத்தப்படும் இத்தேர்வு, சென்னை, சேலம், வேலூர், கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, புதுச்சேரி, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய மையங்களில் ஆகஸ்ட் 6 மற்றும் 11 ஆம் தேதிகளில் நடைபெறும்.

தேர்வு நடைபெறும் இடம், தேதி பற்றிய விவரம் விண்ணப்பதாரர்களுக்கு இ.மெயிலில் தெரிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் குறைந்த பட்சம் 157 செ.மீ., உயரம், 50 கிலோ எடை இருக்க வேண்டும்.

மார்பளவு சாதாரண நிலையில் குறைந்தது 75 செ.மீ., அகலம் இருக்க வேண்டும்.

மேலும் 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்க வேண்டும்.

www.ssc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *