தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கிராம சபை கூட்டம்

தூத்துக்குடி: இந்திய திருநாட்டின் 77வது ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவுறுத்தலின்படி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக மாவட்ட தலைவர் எஸ்.எம்.சகாயராஜ் தலைமையில் தூத்துக்குடி ஒன்றியம் முள்ளக்காடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முள்ளக்காடு கிராம பொதுமக்களுடன் இணைந்து காங்கிரஸ் அரசு கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் மகாத்மா காந்தி அவர்களுடைய பெயரை மீண்டும் சேர்க்க வலியுறுத்தியும் அந்தத் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு மற்றும் இந்தத் திட்டத்திற்கான ஊதியத்தை விரைவாக வழங்கும் வகையில் பழைய நடைமுறையிலேயே செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இதற்கான தீர்மானத்தை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்றிட வலியுறுத்தியும் முள்ளக்காடு கிராம ஊராட்சி செயல் அலுவலரிடம் முள்ளக்காடு கிராம காங்கிரஸ் கமிட்டி சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் டேனியல்ராஜ், சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் செந்தூரப்பாண்டி, சேகர், ஐசன்சில்வா, எஸ்.பி.ராஜன், முள்ளக்காடு காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் முனியதங்க நாடார், பால்ராஜ், முருகன், ராஜவேல், துணை அமைப்பு தலைவர்கள் காங்கிரஸ் ஆராய்ச்சி பிரிவு சிவராஜ் மோகன், முன்னாள் யூனியன் கவுன்சிலர் ராமசாமி, மாவட்ட காங்கிரஸ் செயலாளர்கள் கோபால், கதிர்வேல், சின்ன காளை, மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் மிக்கேல், முன்னாள் மாமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் ராஜாராம், அமைப்புசாரா காங்கிரஸ் அணி நிர்மல் கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் முத்து விஜயா, மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயஜோதி, மாநில காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியம், வசந்தி, மாநகர் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயமணி, சுரேஷ், ரன்னிஸ், ஜோசப் கிருஷ்ணன் வார்டு காங்கிரஸ் தலைவர்கள் முனியசாமி, முருகேசன், மாசிலாமணி, முத்துமாலை, பரமசிவம், பொன்ராஜ் மற்றும் மகாராஜன் உட்பட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Senthil

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *