தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய கனிமொழி கருணாநிதி

தூத்துக்குடியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய கனிமொழி கருணாநிதி

ஜெயராஜ் சாலை நியாய விலைக்கடையில் நடைபெற்ற நிகழ்ச்சி

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

அரிசி, சர்க்கரை, கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்தத் திட்டத்தின் கீழ், 2,22,91,710 அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு மற்றும் ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படுகிறது.

மேலும், பொதுமக்களுக்கு 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் சேலைகள் மற்றும் 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் வேட்டிகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி வழங்கினார்

இதன் ஒரு பகுதியாக, 09.01.2026 அன்று தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ஜெயராஜ் சாலையில் அமைந்துள்ள நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்கினார்.

அமைச்சரும் அதிகாரிகளும் பங்கேற்பு

நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசின் சார்பில் வழங்கப்பட்ட பரிசுத் தொகுப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய கனிமொழி கருணாநிதி

Senthil

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *